Advertisment

ரூ.72 கோடிக்கு ரசிகை சொத்து எழுதி வைத்தாரா? - உண்மையை உடைத்த சஞ்சய் தத்

214

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். கே.ஜி.எஃப் 2 படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோ படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருந்தார். சமீபத்தில் கூட அவர் நடித்த ஒரு பட விழாவில், “லோகேஷ் கனகராஜ் என்னை வீணடித்துவிட்டார், லியோ படத்தில் அவர் எனக்கு பெரிய கேரக்டர் தரவில்லை, அதனால் அவர் மீது கோவத்தில் இருக்கிறேன்” என விளையாட்டாக கூறியிருந்தார். தொடர்ந்து பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

Advertisment

கடந்த 2018ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த சஞ்சய் தத்தின் தீவிர ரசிகராக சொல்லப்படும் நிஷா பட்டில், நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது, தான் இறந்த பிறகு தனது சொத்துகளை சஞ்சய் தத்துக்கு கொடுத்து விடுவதாக கணக்கு வைத்திருக்கும் வங்கியில் கூறியுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை பலரும் பொய்யான தகவல் என்று கூறி வந்தனர். 

இந்த நிலையில் அந்த சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சஞ்சய் தத் பேசியுள்ளார். அவரிடம் அந்த சம்பவம் உண்மையா எனக் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர், “அது உண்மை தான். ஆனால் அந்த சொத்தை பெண்ணின் குடும்பத்தினருக்கே திரும்பிக் கொடுத்துவிட்டேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார். 

 

 

fans Sanjay Dutt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe