Skip to main content

விஜய்யைத் தொடர்ந்து அஜித் - மோதத் தயாராகும் சஞ்சய் தத்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

sanjay dutt to play villan in ajith vidaamuyarchi

 

அஜித் குமார், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக த்ரிஷா கமிட்டாகியுள்ளதாகச் சொல்லப்பட்டது. பின்பு தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாகப் பேசப்பட்டது.

 

இப்படத்தின் படப்பிடிப்பு பல முறை தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் சில காரணங்களால் அது ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் பேச்சுக்கள் எழ, "இப்படம் கைவிடப்படவில்லை, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். மேலும் எங்கள் பெருமைமிகு படமாக இது இருக்கும்" என சந்திரமுகி-2 பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தெரிவித்தார். 

 

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில் அவர் சிறிய வில்லனாம். மெயின் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கவுள்ளாராம். இவர் தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சஞ்சய் தத் அடுத்ததாக அஜித் படத்தில் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸில் போட்டி? - சஞ்சய் தத் விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
sanjay dutt election issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விரைவில் ஒரு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. இந்த நிலையில், இந்த தகவல் குறித்து சஞ்சய் தத் தற்போது விளக்கமளித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் அரசியலுக்கு வருவேன் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை. நான் அரசியலில் இறங்க முடிவு எடுத்திருந்தால், முதலில் முறையாக அறிவிப்பேன். தற்போது என்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகளை நம்புவதைத் தவிர்க்கவும்” என குறிப்பிட்டுள்ளார். 

சஞ்சய் தத், அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். மேலும் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். சஞ்சய் தத் சகோதரி பிரியா தத்தும் எம்.பி.யாக இருந்துள்ளார். அவரது தாயார் மற்றும் நடிகையுமான நர்கிஸும் எம்.பி யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.