Advertisment

புது ஹேர் ஸ்டைலில் விஜய்; களத்தில் இணைந்த சஞ்சய் தத்

sanjay dutt joined in vijay leo shooting spot

வாரிசுபடத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் 'லியோ'. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

அந்த படப்பிடிப்பில் மிஷ்கின் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. இது தொடர்பாக அவர் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். லோகேஷ் கனகராஜும் பதிலுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது இந்த படப்பிடிப்பு தளத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் சஞ்சய் தத்தை பூங்கொத்து கொடுத்து படக்குழுவினர் வரவேற்றனர். மேலும் விஜய்யும் அவரை கட்டுத்தழுவி வரவேற்றார். இதில் விஜய்யின் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக உள்ளது. அது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

Sanjay Dutt lokesh kanagaraj actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe