Skip to main content

“அடுத்த யுத்தம் இப்போது தொடங்கிவிட்டது...” -சஞ்சய் தத்துக்கு ஆறுதல் சொன்ன நண்பர்!

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
sanjay dutt

 

 

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 8ஆம் தேதி கடும் மூச்சு திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 10ஆம் தேதி அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய உடல்நலம் மற்றும் திரைப்பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

அதில், "வணக்கம் நண்பர்களே... சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய கால ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்" எனக் கூறியுள்ளார்.

 

அவருடைய உடல்நிலையில் உள்ள பிரச்சினை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அதிகாரபூர்வமாக எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ காரணங்களுக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சமூக வலைதளத்தில் சஞ்சய் தத் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் சஞ்சய் தத் நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து  சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அவருடைய நண்பர் பரேஷ் கெலானி இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், “பிரதர்.., நாம் இந்த பொழுதுபோக்கு பூங்காவை சுற்றி பார்த்துவிட்டோம் என நினைத்தோம். ஆனால், அது உண்மையில்லை. இன்னொரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு செல்ல நாம் தயாராவோம். அடுத்த யுத்தம் இப்போது தொடங்கிவிட்டது. உன்னுடைய தீரத்தை பற்றி நாங்கள் அறிவோம், நீ இதில் வெல்வாய்.'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்