Skip to main content

வேலையை முடித்த அதீரா..! வெளியான ‘கே.ஜி.எஃப். 2’ அப்டேட்!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

sanjay dutt finished dubbing kgf2 movie

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகிவருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், டப்பிங் பணியில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.

 

ad

 

அந்தவகையில், 'கே.ஜி.எஃப். சேப்டர் 2’ படத்தில் அதீராவாக நடித்துள்ள சஞ்சய் தத், தனது டப்பிங் பணியை முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தைப் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸில் போட்டி? - சஞ்சய் தத் விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
sanjay dutt election issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விரைவில் ஒரு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. இந்த நிலையில், இந்த தகவல் குறித்து சஞ்சய் தத் தற்போது விளக்கமளித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் அரசியலுக்கு வருவேன் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை. நான் அரசியலில் இறங்க முடிவு எடுத்திருந்தால், முதலில் முறையாக அறிவிப்பேன். தற்போது என்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகளை நம்புவதைத் தவிர்க்கவும்” என குறிப்பிட்டுள்ளார். 

சஞ்சய் தத், அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். மேலும் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். சஞ்சய் தத் சகோதரி பிரியா தத்தும் எம்.பி.யாக இருந்துள்ளார். அவரது தாயார் மற்றும் நடிகையுமான நர்கிஸும் எம்.பி யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

யஷுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட ஹீரோயின்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
kiara advani to pair with yash in toxic movie

'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு அடுத்த படத்திற்கு 1 வருடத்திற்கு மேலாக காலம் எடுத்து கொண்டார். இவரின் அடுத்த பட அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க கமிட்டாகியுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. 

கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘டாக்சிக்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

kiara advani to pair with yash in toxic movie

இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது கரீனா கபூர் யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஹீரோயினாக கியாரா அத்வானி கமிட்டாகியுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.