sanjay dutt election issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விரைவில் ஒரு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. இந்த நிலையில், இந்த தகவல் குறித்து சஞ்சய் தத் தற்போது விளக்கமளித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் அரசியலுக்கு வருவேன் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை. நான் அரசியலில் இறங்க முடிவு எடுத்திருந்தால், முதலில் முறையாக அறிவிப்பேன். தற்போது என்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகளை நம்புவதைத் தவிர்க்கவும்” என குறிப்பிட்டுள்ளார்.

சஞ்சய் தத், அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். மேலும் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். சஞ்சய் தத் சகோதரி பிரியா தத்தும் எம்.பி.யாக இருந்துள்ளார். அவரது தாயார் மற்றும் நடிகையுமான நர்கிஸும் எம்.பி யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment