sanjay dutt commited as villan in dhanush Shekhar Kammula movie

Advertisment

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க,பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d57b5c8a-33b4-4816-a51e-95106feba602" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_41.jpg" />

இதனிடையே தெலுங்கு திரையுலகில் தேசிய விருதை வென்ற இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் அண்மையில் படத்தின் பூஜை நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில் தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக பெரும் தொகையை படக்குழு வழங்கியுள்ளதாகவும் வரலாற்றுப் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.