கடந்த வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப். கன்னட மொழிப் படமான இது, ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

Advertisment

sanjay dutt

கன்னட சினிமாவிலிருந்து இத்தனை எதிர்பார்புகளுடன் வெளியான இப்படம் அனைத்து மொழி பேசும் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கன்னட சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

Advertisment

பாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு இப்படத்திற்கு இருந்தது, ஷாரூக் கானின் ஜீரோ படத்தை விட வெற்றிகரமாக ஓடியதன் மூலம் தெரிந்தது. தற்போது கேஜிஎஃப் -2 எப்போது வரும், ஷூட்டிங் தொடங்கப்பட்டதா போன்ற பல கேள்விகள் எழுந்தது. கடந்த மே மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. அதை தெரிவிக்க படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டது படக்குழு. அந்த புகைப்படத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் அமர்ந்துகொண்டு படப்பிடிப்பை மேற்பார்வை இடுவது போல் இருந்தது.

இரண்டாவது பாகத்தில் ஆதிரா என்றொரு கதாபாத்திரம்தான் வில்லன். அந்த கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தை நடிக்க வைக்க படக்குழு அனுகுவதாக முன்னம் தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில் முன்பே தகவல்கள் வெளியானதைபோல் அந்த கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் தான் நடிக்கிறார் என்று படக்குழு சஞ்சய் தத்தின் பிறந்தநாளான நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு ட்விட்டரில் ட்ரெண்டாகி வைரலானது.

ஆதிரா கதாபாத்திரத்தில் தான் நடிப்பது குறித்து சஞ்சய் தத் கூறுகையில், “ஆதீராவின் கதாபாத்திரம் மிகவும் பயங்கரமானது. நீங்கள் அவெஞ்சர்ஸ் படம் பார்த்திருந்தால் உங்களுக்கு தானோஸை பற்றி தெரிந்திருக்கும். அதீரா கதாபாத்திரமும் அதுபோல தான். ஆதிரா என்பவன் மிகவும் ஆபத்தானவன். இதுபோல ஒரு கதாபாத்திரத்துற்காகத்தான் நான் காத்திருந்தேன்” என்றார்.