Skip to main content

கமல் பட நிறுவனம் மூலம் இயக்குனராகும் நடிகர் சந்தான பாரதியின் மகன் 

Published on 18/12/2018 | Edited on 18/12/2018
sanjay bharathy

 

 

 

பல்வேறு வெற்றி படங்களை இயக்கிய மூத்த இயக்குனர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி, பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் புதிய படம் மூலம் இயக்குனராகிறார்.  மலையாளத்தில் மம்மூட்டி நடித்த பழசி ராஜா, திலீப்-சித்தார்த் நடித்த கமர சம்பவம், மோகன்லால்-நிவின் பாலி நடித்த காயன்குளம் கொசுன்னி, தமிழில் பத்மஸ்ரீ கமலஹாசன் நடிப்பில் வெளியான தூங்காவனம் ஆகிய படங்களை தயாரித்த கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு இளைய இயக்குனர்களை அறிமுகம் செய்யும் இந்த நிறுவனம், காதல், ஆக்ஷன், என்று ஜனரஞ்சகமாக உருவாக்கப்படும் இந்த பெயரிடப்படாத படத்தையும் தயாரிக்க உள்ளனர். இயக்குநர் விஜய்யிடம் பல்வேறு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ள சஞ்சய் பாரதி இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப்பெற்று கொண்டு இருப்பதாகவும் , பிப்ரவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
 

 

சார்ந்த செய்திகள்