Sania Mirza divorce Shoaib Malik and Shoaib Malik marriage Pakistan actress

Advertisment

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக், 2006ஆம் ஆண்டு ஆயிஷா சித்திக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்பு 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்து, அதே ஆண்டு டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2018ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து இருவரும் பிரிந்து விட்டதாக சமீப காலமாக தகவல் வெளியானது. ஆனால் இருவரின் தரப்பிலும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் இருந்தனர். இதனிடையே சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்துடன் டேட்டிங் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதனிடையே சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா, கணவரை தன்னிச்சையாக விவாரத்து செய்யும் குலா என்ற இஸ்லாமிய முறைப்படி சோயிப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.