Sangeetha Utsavam Season 2

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும்சென்னையில் சங்கீத உற்சவம் திருவிழா நிகழ்ச்சி - சீசன் 2, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னை மக்களை மகிழ்விக்கும் விதமாகநடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை ப்ரோமோஷன் செய்வதற்காக , பிரபல இசைக் கலைஞர்களானபாடகர் மஹதி, இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா,இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குநர், விநாயகா கேட்டரிங் நிர்வாக இயக்குநர் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

Advertisment

இந்நிகழ்வினில் பாடகி மஹதி பேசியதாவது, “பொதுவாகச் சென்னையில் சங்கீத கச்சேரிகள், சென்னையில் உட்புறமான மயிலை, தி நகர் போன்ற இடங்களில் மட்டுமே நடக்கிறது. பரந்து விரிந்துவிட்ட சென்னை நகரின் பல பக்கங்களில் இருக்கும், மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும், சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது.இவ்விழா 6 நாட்கள், வெவ்வேறு கலைஞர்கள் கலந்துகொள்ள மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது. நான் 31 ஆம் தேதி இசை நிகழ்வில் கலந்துகொள்கிறேன். இவ்விழா பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Advertisment

இன்று முதல் (டிசம்பர் 27) முதல் ஜனவரி 1 வரை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர் கே கன்வென்சன் சென்டர் அரங்கத்தில், பல முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. டிசம்பர் 27 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கேரளா ஷரத்தின் நிகழ்ச்சி, டிசம்பர் 28 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரிச்சூர் சகோதரர்கள் நிகழ்ச்சி, டிசம்பர் 29 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ராஜேஷ் வைத்யா நிகழ்ச்சி, டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு விக்னேஷ் ஈஸ்வர் மற்றும் திருவாரூர் பக்தவச்சலம் நிகழ்ச்சி, டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பாடகி மஹதி நிகழ்ச்சி, ஜனவரி 1 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ராகுல் தேஷ் பாண்டே மற்றும் சந்தீப் நாராயணன் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.