“கடின உழைப்பு, நேர்மை...” - ஜேசன் சஞ்சய் குறித்து சந்தீப் கிஷன்

262

விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், தற்போது சந்தீப் கிஷனை வைத்து இன்னும் பெயரிடாத தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா தயாரிக்க தமன் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகிறது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி திரைப்பிரபலங்கள், விஜய் ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லைகா நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் தனது எக்ஸ் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சந்தீப் கிஷன் வெளியிட்டுள்ள பதிவில், “ஹேப்பி பர்த்டே மை டைரக்டர் & காட் கிஃப்டட் லிட்டில் ப்ரோ. தூய்மை நிறைந்த மனதுடன் உற்சாகத்துடனும் அமைதியுடனும் இருக்கும் உங்களுடன் தினமும் இருப்பதை ஒரு பாக்கியமாக பார்க்கிறேன். உலகம் உங்களின் கடினமாக உழைப்பையும் நேர்மையையும் அதோடு உண்மையான தன்மையையும் மிக விரைவில் பார்க்கும். அதோடு கொண்டாடவும் செய்யும். அப்போது நான் உங்களை நினைத்து ஒரு அண்ணனாக பெருமைப்படுவேன். உங்களின் 25வது பிறந்தநாள் இதுவரை இல்லாத சிறந்த ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்    ” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜேசன் சஞ்சய் துப்பாக்கி சூடும் விளையாட்டை விளையாடும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். 

jason sanjay sundeep kishan
இதையும் படியுங்கள்
Subscribe