Advertisment

விநாயகர் சதுர்த்தியை குறி வைக்கும் விஷால் 

irumbu thirai.jpeg

vishal

'இரும்புத்திரை' படத்தையடுத்து நடிகர் விஷால் அடுத்ததாக 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இப்படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது இதன் இறுதி கட்ட 40 நாட்கள் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கின்ற நிலையில் 'சண்டக்கோழி 2' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரபேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விஷாலின் 25வது படமாக உருவாகி வரும் இப்படம் தன் முந்தைய படமான 'சண்டக்கோழியை' விட பல மடங்கு நன்றாக வந்திருக்கிறது எனவும், படத்தை வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட திட்டமிட்டு அதற்காக சங்கத்திடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisment
mahanadhi nadigaiyarthilagam keerthysuresh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe