Advertisment

சின்ன கதாபாத்திரத்தை பான் இந்தியா ஸ்டார் ஏற்றார்; நடிகரை புகழ்ந்த சஞ்சிதா ஷெட்டி

Sanchitha Shetty Interview

'அழகிய கண்ணே' படத்தில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். நம்மோடு பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment

எனக்கும் புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டர் சிறப்பாக அமைந்திருக்கிறது. காதலுக்காக எதையும் செய்யும் கேரக்டர். வினோதய சித்தம் படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் பேசப்பட்டது. அதுபோல் இந்தப் படத்திலும் என்னுடைய கேரக்டர் நிச்சயம் பேசப்படும்.

Advertisment

தன்னுடைய பின்புலம் எதையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல், இந்தப் படத்துக்காக லியோ சிவக்குமார் அவ்வளவு பெரிய உழைப்பை வழங்கினார். கற்றுக் கொள்வதற்கு எப்போதும் ஆர்வமாக இருந்தார். இந்தப் படத்தில் நடித்ததற்கு விஜய் சேதுபதிக்கு நன்றி. அவரோடு இணைந்து நடிக்கும் காட்சிகள் இதில் எனக்கு இல்லை. ஒரு பான் இந்தியா ஸ்டாராக இருக்கும் அவர், இந்த சின்ன கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு நடித்தது பெரிய விஷயம்.

சீனு ராமசாமி சாரின் சகோதரர் விஜயகுமார் தன்னுடைய முதல் படமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அசிஸ்டென்ட் டைரக்டர்கள் குறித்த கதைகள் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் வரவில்லை. அவருடைய சொந்த அனுபவங்கள் பலவற்றை இந்தப் படத்தில் சேர்த்துள்ளார். மொத்தமாகவே இது ஒரு பாசிட்டிவான டீம். ஒரு குடும்பம் போல் இந்த செட் இருந்தது. அமீர் சாரின் படத்தில் அடுத்து நான் நடிக்கிறேன். யுவன் சாரின் இசையில் அந்தப் படம் அமைந்திருக்கிறது. அழகிய கண்ணே படத்தைக் குடும்பத்துடன் வந்து அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும்.

N Studio Sanchitha Shetty
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe