Advertisment

புதிய ஹீரோவுக்கு எப்போதும் நான் லக்கியான ஹீரோயின்  - சஞ்சிதா ஷெட்டி

  Sanchitha Shetty  - Azhagiya kanne movie function

அழகிய கண்ணே பட விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு சினிமா ஆளுமைகள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் படத்தின் கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Advertisment

நிகழ்வில் சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது, “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது. இன்று வரை என்னைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. கே.எஸ். ரவிக்குமார் சார் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவருடைய பெரிய ரசிகை நான். லியோனி சார் உட்பட ஹீரோ சிவாவின் குடும்பத்தினர் இந்தப் படத்தின் செட்டை கலகலப்பாக வைத்துக் கொண்டனர். புதிய இயக்குநர் மற்றும் புதிய ஹீரோவுக்கு எப்போதும் நான் லக்கியான ஹீரோயின் என்று சொல்வார்கள்.

Advertisment

புதிய இயக்குநர்களின் பல படங்களில் நான் நடித்துள்ளேன். நான் நடித்த இவ்வளவு படங்களில் அழகிய கண்ணே என்கிற இந்த டைட்டில் தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்தப் படத்தில் கஸ்தூரி என்கிற கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். அருமையான கேரக்டர் அது. ஒரு அசிஸ்டென்டாக இருந்து இயக்குநராக மாறுவதில் உள்ள பயணம் இந்தப் படத்தில் பேசப்படும். பல இயக்குநர்களோடு இதில் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான விஷயம். அனைத்து வயதினரும் தங்களுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து பார்க்கும் படமாக இது இருக்கும்.

என்னுடைய தந்தையின் பிறந்தநாளான ஜூன் 23 அன்று இந்தப் படம் வெளியாகிறது. வளர்ந்து வரும் அனைத்து அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கும் இந்தப் படத்தை நான் சமர்ப்பிக்கிறேன். இது ஒரு கற்பனைக் கதை தான். நல்ல ஒரு காதல் கதையில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இந்தப் படத்தின் மூலம் எனக்கு நிறைவேறியுள்ளது.

Sanchitha Shetty Azhagiya kanne movie function
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe