கைவசம் நிறைய படங்களை வைத்துள்ள நடிகர் ஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது குப்பத்துராஜா, அடங்காதே, 100% காதல், செம, 4ஜி, சர்வம் தாளமயம் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘3 டி’ தொழில் நுட்பத்தில் தயாராகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாயகன் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அமிராதஸ்தர் நடிக்கும் இந்த படத்தில் நடிகை சோனியா அகர்வாலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் தற்போது புதியதாக இன்னொரு கதாநாயகியாக சமீபத்தில் 'சுச்சி லீக்ஸ்' சர்ச்சையில் சிக்கிய நடிகை சஞ்சிதா செட்டி இணைந்துள்ளார்.