sanam shetty speech about womens misbehaviour incidents

திரைத்துறையில் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அம்புலி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் பாலியல் வன்கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுவதைக் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதி வேண்டி தனியார் அமைப்புடன் இணைந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினார். அதில் கலந்து கொண்டு பேசிய சனம் ஷெட்டி, “நான் நடிகை என்பதால் வெறும் பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகளை மட்டும் சமூக வலைதளங்களில் போட சொல்கிறார்கள். இந்த சமூகத்தில் தான் நான் வாழ்கிறேன். நாளைக்கு என் வீட்டில் கூட இது போன்ற விஷயங்கள் நடந்தால் அப்பவும் எப்படி பொழுது போக்கிற்கான பதிவுகளை பகிர முடியும். இதனால் சினிமா வாய்ப்பு கூட போனால் போகட்டும். பரவாயில்லை. எது போனாலும் நான் பேசுவேன்.

Advertisment

மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காது என யார் கியாரண்டி தருவார். ஹேமா அறிக்கை வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது. சொந்த அப்பாவே அவரது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சமூகத்தில் வாழ்கிறோம். இதில் எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. அதனால் இப்போது இருக்கும் தண்டனை பத்தாது. பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் ஆணுறுப்பை அறுக்க வேண்டும். அதை பார்த்து யாருக்கும் அந்த சிந்தனை வரக்கூடாது” என்று ஆவேசமாகப் பேசினார்.