Advertisment

"இது எவ்ளோ பெரிய கேவலம்; முஸ்லிம் என்றதால் இந்த பாகுபாடா..." -  நடிகை சனம் ஷெட்டி காட்டம் 

sanam shetty airport issue

Advertisment

திரைத்துறையில் 2012ஆம்ஆண்டு தமிழில் வெளியான 'அம்புலி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும்கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம்செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் விமான நிலையத்தில் மத ரீதியாகஊழியர்கள் பாகுபாடு காட்டுவதாகத்தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள சனம் ஷெட்டி, "கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தேன். வருத்தமான ஒரு நிகழ்வு நடந்தது. அதனைகண்டிப்பாக உங்களிடம்பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் விமானம் ஏறுவதற்கு முன்பு என்னையும்இரண்டு முஸ்லிம் நபர்களையும் தனியாக அழைத்து எங்களுடையதுணிமணிகளை சோதித்தனர்.என்னை என் பெயர் காரணத்தினாலும், அவர்கள்முஸ்லிம்ஆடைகள்அணிந்தவாறு இருந்ததாலும்இது போன்றுநடந்து கொண்டனர்.

மொத்தம் 190 பயணிகள் இருக்கும் போது எங்களை மட்டும் தனியாக சோதித்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஏன் எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதிக்கிறீர்கள்... என கேட்டேன். வழக்கமான சோதனை தான் என்று பதில் சொன்னார்கள். இதை பார்க்கும் போதுஎன்னுடைய கேள்வி என்னவென்றால், அந்த 190 பயணிகளும்எந்த பேக்கும்எடுத்துப் போகவில்லையா... அவர்கள் எதுவும் எடுத்து வர வாய்ப்பில்லையா... சோதனை செய்தால் அணைத்து பயணிகளின் பேக்குகளை சோதிக்கவேண்டும். எங்களை மட்டும் இப்படி மத ரீதியாக பாகுபாடு காட்டி சோதனை செய்வது எங்களைப் புண்படுத்துகிறது. முதலில் மத ரீதியான பாகுபாடுகளைநிறுத்த வேண்டும். இது எவ்ளோ பெரிய கேவலம்." என்று காட்டமாக பேசியுள்ளார்.

Advertisment

இதேபோல் நடிகை அமலா பாலுக்கும் மத பாகுபாடு காரணமாக கேரளாவில் உள்ள ஒரு கோவிலில், உள்ளேநுழைய அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

airport Coimbatore sanam shetty
இதையும் படியுங்கள்
Subscribe