நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், கடந்த 27ஆம் தேதி கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரைக்காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் மற்றும் பொது மக்களும் கூடினர். கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்து அது பெரிய துயர சம்பவமாக மாறியது. மூச்சுத்திணறியும் மயக்கமடைந்தும் 41 நபர்கள் இறந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தேசிய தலைவர்கள் முதல் அனைத்து கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறி பின்பு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தும் வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நிவாரண நிதி, வழக்குப் பதிவு, ஆணை விசாரனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதே சமயம் தவெக சார்பில் சிபிஐ விசாரணை வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த துயரச் சம்பவத்துக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், மோகன்லால், மம்மூட்டி, ஜி.வி.பிரகாஷ், வடிவேலு, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், ராஜ் கிரண், கார்த்தி, ரவி மோகன், டி.ராஜேந்தர், யுவன் ஷங்கர் ராஜா, லதா ரஜினிகாந்த், ஆண்ட்ரியா ஆகியோர் உயிரிழந்த குடும்பத்தாருக்கு இரங்கலும் சிகிச்சை பெற்று வரும் குடும்பத்தாருக்கு அறுதலும் தெரிவித்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/29/119-2025-09-29-17-22-41.jpg)
இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டி தற்போது கரூர் விரைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அந்த செய்தி கேட்டதுல இருந்தே மனசுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்படியாவது மக்கள சந்திச்சே ஆகனும்னு பெர்மிஷன் வாங்க ட்ரை பன்ன்னேன். சி.எம், மினிஸ்டர் போறாங்கன்னு எனக்கு பெர்மிஷன் கிடைக்கல. இப்ப பெர்மிஷன் கிடைச்சவுடனே கிளம்பிட்டேன். எனக்கு சோறு போட்டு அங்கீகாரம் கொடுத்த தமிழ்நாட்டு மக்கள் இவ்ளோ பெரிய கொடூரமான விபத்து நடந்திருக்குற போது அவங்கள பார்க்காம போனா, இதுக்கப்புறம் நான் எது பண்ணாலும் வேஸ்ட் தான்” என்றார்.
மேலும் அந்த வீடியோவின் கேப்ஷனில், “கரூர் கூட்ட நெரிசலில் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்த நம் மக்களுக்காக என் இதயம் ரத்தம் சிந்தும் அளவிற்கு வருந்துகிறது. இது அற்ப அரசியல் மற்றும் பழி வாங்குவதற்குமான நேரம் அல்ல. தாங்க முடியாத துயரத்தில் நம் மக்களுடன் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டிய நேரம் இது. குழந்தைகள் உட்பட அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது முழு ஆதரவையும் பிரார்த்தனையையும் வழங்க நான் இப்போது கரூரில் இருக்கிறேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/29/120-2025-09-29-17-15-01.jpg)