sanal kumar sasidharan said will not take film until proven innocent

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை மஞ்சு வாரியரை காணவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் இயக்குநர் சணல் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில்தெரிவித்திருந்தார்.அத்துடன் மஞ்சு வாரியரின் நிலை குறித்து ஜனாதிபதிக்கும், உச்சநீதிமன்றத்திற்கும்கடிதம் எழுதியுள்ளதாக கூறியிருந்தார். இவரின்இந்த பதிவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisment

இதனைதொடர்ந்துநடிகை மஞ்சு வாரியர் இயக்குநர் சணல்குமார் மீது காவல் நிலையத்தில்புகார் அளித்திருந்தார். தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சணல் குமார் செயல்படுவதாகவும், தான் செல்லும் இடத்திற்கு எல்லாம் பின் தொடர்ந்து வந்து என்னை தொந்தரவு செய்கிறார் என்றும்மஞ்சு வாரியர் புகாரில்குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.

Advertisment

இந்நிலையில் நான் நிரபராதி என நிரூபிக்கும் வரை படம் எதுவும் எடுக்க போவதில்லைஎன இயக்குநர் சணல்குமார்சசிதரன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் கைதாகி 5 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கு என்று காவல் நிலையத்தில் நான் அளித்த புகார் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் நான் நிரபராதி என நிரூபிக்கும் வரை படம் இயக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.