Advertisment

மஞ்சு வாரியர் கொடுத்த புகார்; பிரபல இயக்குநர் கைது 

sanal kumar sasidharan arrested manju warrier

அண்மையில் நடிகை மஞ்சு வாரியரை காணவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் இயக்குநர் சணல் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில்தெரிவித்திருந்தார்.மேலும் மஞ்சு வாரியரின் நிலை குறித்து ஜனாதிபதிக்கும், உச்சநீதிமன்றத்திற்கும்கடிதம் எழுதியுள்ளதாக கூறியிருந்தார். இவரின்இந்த பதிவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisment

இந்நிலையில் மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் சணல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மஞ்சு வாரியர் அளித்த புகாரில், சமூக வலைத்தளங்களில் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்துவதாகவும், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சணல் குமார் செயல்படுவதாகவும்குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த புகாரில் தான் செல்லும் இடத்திற்கு எல்லாம் பின் தொடர்ந்து வந்து என்னை தொந்தரவு செய்கிறார் என்றும்மஞ்சு வாரியர் குறிப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்துள்ள எர்ணாகுளம் பகுதியில் உள்ளகாவல் நிலைய போலீசார் இன்று(5.5.2022)இயக்குநர் சணல் குமாரைகைது செய்துள்ளனர். தன்னை கைது செய்யும் பொழுது எடுக்கப்பட்ட லைவ் வீடியோவையும் தனது சமூகவலைதள பக்கத்தில்அவர் பகிர்ந்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக நடிகை மஞ்சு வாரியர் நேற்று(4.5.2022) எர்ணாகுளம் காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து உள்ளதாக கூறப்படுகிறது.

arrested manju warrier
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe