Advertisment

“இனி ஒருபோதும் ஹிஜாப்பை அகற்ற மாட்டேன்” - சிம்பு பட நடிகை உறுதி

Sana Khan reveals why she started wearing hijab

பிரபல பாலிவுட் நடிகை சனா கான் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ள சனா கான் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாகஇருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு முஃப்தி அனஸ் சையது என்பவரை திருமணம் செய்து கொண்ட சனா கான் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் தனது வாழ்வின் கடுமையான நாள் குறித்தும், ஹிஜாப் அணிவது குறித்தும் சனா கான் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் பெயர், புகழ் பணம் என எல்லாம் இருந்தன. ஆனால் நிம்மதி மட்டும் இல்லை. அது மிகவும் கடுமையான நாட்களாக இருந்தன. அந்த மாதிரியான சூழ்நிலையில் தான் எனக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ரமலான் நாளன்று ஒரு கனவு வந்தது. அதில் ஒரு கல்லறையில் நான் இருந்தேன். அது எனக்கு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. மேலும் அந்த கல்லறையில் ‘உங்களின் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது. மறுநாள் காலையில் நான் எழுந்தபோது எனக்கு பிறந்தநாள். அன்று முதல் நான் ஹிஜாப் அணிய தொடங்கினேன். அன்று முதல் இதை ஒருபோதும் அகற்ற மாட்டேன் என முடிவெடுத்தேன். தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

sana khan Hijab actor simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe