தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது. தற்போது, இதன் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நடிகை சம்யுக்தா சக போட்டியாளராகக் கலந்து கொண்டார். கடந்த வாரம், நடந்த வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளைப் பெற்ற சம்யுக்தா, இத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், அவருக்குத் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும், 'துக்ளக் தர்பார்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகவலை சம்யுக்தா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
டெல்லி பிரசாத் தீனதயால் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மஞ்சிமா மோகன், அதிதி ராவ், பார்த்திபன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.