ராஜமௌலி படத்தில் வில்லனாக நடிக்கும் சமுத்திரக்கனி...?

rrr

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

'பாகுபலி' புகழ் ராஜமௌலி தற்போது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தை மிக பிரமாண்ட இயக்கிவருகிறார். சுமார் 300 கோடி செலவில் உருவாகும் இப்படத்திற்கு தற்சமயம் 'ஆர்ஆர்ஆர்' என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் சமுத்திரக்கனியின் முதல் தெலுங்கு படமாக இது அமையும். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தற்போது சண்டிகர் விரைந்துள்ளது. அங்கு சில முக்கிய காட்சிகளில் நடிக்கும் சமுத்திரக்கனி அதை முடித்து விட்டு மீண்டும் தான் இயக்கியிருக்கும் நாடோடிகள் 2 படத்தின் ரிலீஸ் பணிகளை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 'நாடோடிகள்' படத்தை பார்த்த ராஜமௌலி, சமுத்திரக்கனியை பாராட்டியதுடன் மட்டுமல்லாமல் தன் வீட்டிற்கும் அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RRR ss rajamouli
இதையும் படியுங்கள்
Subscribe