மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் தலைவி என்றொரு படத்தை எடுத்து வருகிறார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடிக்கிறார். இவ்விருவரின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரும் வெளியாகி ரசிகளின் வரவேற்பை பெற்று வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aravind-swamy.jpg)
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் உருவாகுவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், தலைவி படத்தில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எம்ஜிஆரின் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இந்தாண்டு ஜூன் 26ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
Follow Us