Advertisment

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சமுத்திரக்கனி இயக்கி நடித்த படம்!

Samuthirakani

சமுத்திரக்கனி இயக்கி, நடித்துள்ள படம் 'விநோதய சித்தம்'. இப்படத்தில் தம்பி இராமையா, முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, அபிராமி ராமநாதன் தயாரித்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், 'விநோதய சித்தம்' திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதி நேரடியாக ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, 'மதில்’, ‘ஒருபக்க கதை’, ‘மலேஷியா டு அம்னீஷியா’, 'டிக்கிலோனா' ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஜீ5 தளத்தில் நேரடியாக வெளியாகும் தமிழ்ப்படம் 'விநோதய சித்தம்' ஆகும்.

Advertisment

இப்படம் குறித்து நடிகர் சமுத்திரக்கனி கூறுகையில், "மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ளமுடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தைப் பார்வையாளர்களுக்குக் காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி" எனக் கூறினார்.

samuthirakani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe