Advertisment

நீதிக்கான போராட்டத்தின் வரலாற்றைப் பேசும் படம் ‘வீர வணக்கம்’

472

விஷாரத் க்ரியேஷன்ஸ் வழங்கும், இயக்குநர்  அனில் வி.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில், உருவாகியுள்ள திரைப்படம் ‘வீர வணக்கம்’. இப்படத்தில் ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, ஆதர்ஷ், சித்தாங்கனா, ஐஸ்விகா,  அரிஸ்டோ சுரேஷ், சித்திக் ஆகியோர்  முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும்  கேரளா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, வெளியிட்டார். இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்றைய தமிழகத்தின் ஒரு கிராமத்தில், வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணுக்கும்  பெண்ணுக்குமான ஒரு அழகான  நட்பு, ஜாதிய மனோபாவத்தால் சிதைக்கப்படுகிறது. அதை தடுக்கும் ஒரு பெரிய மனிதரின் வழியே, தமிழகத்திலும், கேரளத்திலும்  உண்மையில் வாழ்ந்து நீதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஆளுமையான பி கிருஷ்ணபிள்ளையின் வரலாற்றின் கதையை இப்படம் சொல்கிறது. 

பெரியாரின் முற்போக்கு சிந்தனையையும், திராவிட சித்தாந்தத்தையும் பேசுவதோடு,  தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை அன்பை, இப்படம் பேசுகிறது. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

 

samuthirakani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe