/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/367_3.jpg)
தம்பி ராமையா, தற்போது பிரபுசாலமன் இயக்கும் 'செம்பி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிப்பது மட்டுமில்லாமல் 'மனு நீதி', 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்', 'மணியார் குடும்பம்' உள்ளிட்ட படங்களை இயக்கவும் செய்துள்ளார்.
இந்நிலையில் தம்பி ராமையா இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ராஜா கிளி' எனத் தலைப்பில் உருவாகும் இப்படத்தில் சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறர். மேலும் சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நேற்றுநடைபெற்றது. இதனைத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே சமுத்திரக்கனி இயக்கத்தில் 'வினோதய சித்தம்' படத்தில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது தம்பி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளதால் 'ராஜா கிளி' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)