/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-3_37.jpg)
சமுத்திரக்கனி, 2003-ஆம் ஆண்டு 'உன்னைச் சரணடைந்தேன்' படத்தின் முலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து 'நாடோடிகள்', 'போராளி', 'நிமிர்ந்து நில்', 'அப்பா' உள்ளிட்ட நல்ல படங்களை இயக்கினார். இயக்குவது மட்டும் இல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான படம் 'வினோதய சித்தம்'. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமுத்திரக்கனி, அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'கேகே கிரியேட்டிவ் ஒர்க்ஸ்' மற்றும் 'ஜீ ஸ்டுடியோஸ்' இரு நிறுவனங்களும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு 'விமானம்' என்று தலைப்பு வைக்கப்பட்டு, படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மூன்று சக்கரவண்டியில் ஒரு குழந்தையுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவருகிறது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)