samuthirakani starring public film first look poster goes viral

Advertisment

இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி கடைசியாகஇயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப்இயக்கத்தில் 'ரைட்டர்' படத்தில் நடித்திருந்தார். நீலம் புரொடக்சன்தயாரிப்பில் இயக்குநர்பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் போலீசாக நடித்தசமுத்திரக்கனியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி அறிமுக இயக்குநர் ரா.பரமன்இயக்கும் 'பப்ளிக்' படத்தில் நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட், ரித்திகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு யுகபாரதி பாடல் எழுதுகிறார். அரசியல் கட்சி தொண்டர்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைநடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன், காயிதே மில்லத் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள்இடம் பெற்றுள்ள இந்தப் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.