samuthirakani starring Naan Kadavul Illai trailer trending on social media

Advertisment

பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஏ. சந்திரசேகரின் 71வது படமாக உருவாகியிருக்கிறது 'நான் கடவுள் இல்லை' திரைப்படம். இப்படத்தைத்தனது சொந்த நிறுவனமான ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிக்கிறார். இப்படத்தில் தைரியமான போலீஸ் அதிகாரியாக நடிகர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அவரது மனைவியாக நடிகை இனியாவும் மகளாகச் சிறுமி டயானா ஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள். எஸ்.ஏ. சந்திரசேகர், சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகிணி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், வித்தியாசமான வில்லனாகப் பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="7f6c8290-29d7-490a-b99b-749afa324836" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_58.jpg" />

இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, 'நான் கடவுள் இல்லை' படத்தின் ட்ரைலரைப் படக்குழு வெளியிட்டது. விறுவிறுப்பான ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் யூடியூப் தளத்தில் 4 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment