dsavsd

Advertisment

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள “ஏலே” படத்தில் நடிகர் சமுத்திரகனி கிராமப்புறத்தில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் ‘முத்துக்குட்டி’எனும் கலகலப்பான மனிதராக நடிக்கிறார். இப்படத்திற்கான விளம்பர முன்னோட்டமாக படத்தில் வரும் முத்துக்குட்டி கதாப்பாத்திர தோரணையில், மக்கள் புழங்கும் திருத்தணி முருகன் கோவில் முன்னால் ஏலே ஐஸ் வண்டியில் ‘குச்சி ஐஸ்’விற்பனை செய்துள்ளார். நகரம் முழுதும் முருக கடவுளின் தைப்பூச திருவிழா கொண்டாட்டத்தில் குழுமியிருக்க, மக்களுக்குப் படத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கொண்டு செல்லும் பொருட்டு படக்குழு இவ்விடத்தை தேர்ந்தெடுத்து, இந்த விளம்பரத்தினை செய்துள்ளது. சமுத்திரகனி ஐஸ் விற்பதைக் கண்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள் பெரும் கூட்டமாக கூடிவிட்டனர். நடிகர் சமுத்திரகனி மக்களுடன் இயல்பாக உரையாடி மகிழ்ந்து, அவர்களுக்கு குச்சி ஐஸ் தந்தார். அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களை மகிழ்வித்தார்.

dvdsvd

இதனைத் தொடர்ந்து இதே மாதிரியான விளம்பர யுக்தியினை சிறுவாபுரி முருகன் கோவிலிலும் செய்தார் சமுத்திரகனி. அங்கும் ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தைப்பூச திருநாளில் துவங்கப்பட்ட ‘ஏலே’படத்தின் விளம்பரப் பணிகள் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் பொருட்டு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது தந்தையுடனான உறவு குறித்து பேசிய சிறு வீடியோ ரசிகர்களிடம் நேர்மறையான பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.