/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11_171.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அருண் விஜய் 33'. இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பாதியில் தடைப்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள படக்குழு, காரைக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திவருகிறது.
இப்படத்தில் அருண்விஜய்க்கு அண்ணனாக நடிக்க பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். சமீபத்தில் பிரகாஷ் ராஜ் கால் இடறி கீழே விழுந்ததில் அவருக்கு தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரகாஷ் ராஜ், தற்போது ஓய்வெடுத்துவருகிறார். இதனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரகாஷ் ராஜிற்கு பதிலாக நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் ஹரியை தொடர்புகொண்ட பிரகாஷ் ராஜ், படத்தில் நடிக்க முடியாத காரணத்தை விளக்கிக்கூறி எனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதையடுத்து இந்த முடிவை இயக்குநர் ஹரி எடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)