பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சமுத்திரக்கனி ரா.பார்த்திபன் குறித்து பேசியபோது....

Advertisment

samuthirakani

''பார்த்திபனுடன் நான் நிறை பேசிக்கொண்டிருப்பேன். போனிலும் நேரிலும் பல விஷயங்களை விவாதிப்பேன். பல படங்களில் நடித்து நிறைய பணம் சம்பாதிப்பார் பார்த்திபன். அந்த பணத்தை வைத்து தரமான படங்களைத் தயாரித்து இயக்குவதன் மூலம், மக்களிடம் பெற்ற பணத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுப்பார். நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற அவரது வேட்கை எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும். அவரது 'ஒத்த செருப்பு' படம் பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்'' என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/VeJJeIXguAI.jpg?itok=x1n_V5iE","video_url":" Video (Responsive, autoplaying)."]}