Advertisment

அஜித் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்

samuthirakani joins ajithkumar ak61 film

Advertisment

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.இதனைத்தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்குமேல் உடல்எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைந்துள்ளதாககூறப்படுகிறது. 'ஏகே 61' படத்திற்காகஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் சென்னைமவுண்ட் ரோடுபோன்றபிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்புதொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பதாகவும், வில்லனாக ஜான் கொக்கின் நடித்த வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்தமுக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அஜித்தின் 'ஏகே 61' படத்தில் சமுத்திரக்கனி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இத்தகவலை நடிகர் சமுத்திரக்கனி சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். விசாரணை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகநடிகர் சமுத்திரக்கனிக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ACTOR AJITHKUMAR AK61 samuthirakani
இதையும் படியுங்கள்
Subscribe