Skip to main content

அஜித் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

samuthirakani joins ajithkumar ak61 film

 

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 'ஏகே 61' படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம்  சிட்டியில் சென்னை மவுண்ட் ரோடு  போன்ற பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பதாகவும், வில்லனாக ஜான் கொக்கின் நடித்த வருவதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அஜித்தின் 'ஏகே 61' படத்தில் சமுத்திரக்கனி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இத்தகவலை நடிகர் சமுத்திரக்கனி சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். விசாரணை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் சமுத்திரக்கனிக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இங்கு சரி செய்ய வேண்டியது அப்பாக்களைத் தான்” - சமுத்திரக்கனி 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
samuthirakani speech in Ramam Ragavam Teaser Launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த  விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது சமுத்திரக்கனி பேசுகையில், “அப்பா கதை என்றாலே கேட்டுவிடுவது. அப்படித்தான் இந்த கதையையும் கேட்டேன். அப்பா மகன் உறவை புரிந்து கொள்ளவே முடியாது. நிறைய அப்பாக்கள் என்னிடம், மகனை பற்றி பேசியிருக்கிறார்கள். பத்து நாள் முன்னாடி கூட சிவகாசியில், ஒரு அப்பா, அவரின் மகனிடம் பேசச் சொன்னார். ஃபோனில் கேம் ஆடிக்கொண்டே இருக்கிறான், தப்பான வழியில் போய்விடுவானோ என பயமாக இருப்பதாக சொன்னார். பையனிடம் பேசினேன். அவனுக்கு ரொபோட்டிக் ரொம்ப பிடிக்கும் என்றும் அதை அவனே தயாரிக்கப் போவதாகவும் சொன்னான். 

அதோடு அதை அப்பாவால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றான். உடனே அவனின் அப்பாவிடம் பத்து நிமிஷம் பேசினேன். இங்கு சரி செய்ய வேண்டியது அப்பாக்களைத் தான். மகன் என்னமோ செய்ய வேண்டும் என நினைக்கிறான். அதை செய்யவிடுங்கள். உங்களுடைய அறிவை அவன் மூளையில் திணிக்காதீர்கள். எல்லோரும் அவரவர் இடத்தில் மிகச் சரியாக இருக்கிறார்கள்” என்றார்.  

Next Story

“மேக்கிங் தேவையில்லை; எமோஷனே போதும்” - வெற்றி குறித்து சூரி    

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
soori speech at samuthirakani Ramam Raghavam Teaser launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த டீசர் விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது சூரி பேசுகையில், “வெண்ணிலா கபடி குழு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது என்னுடைய கேரக்டரில் நடித்து, இங்கு என்னைவிட அங்கு அதிக வரவேற்பை பெற்றவர் தனராஜ். அப்போது முதல் என்னுடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் எனக்கு ஃபோனில் பண்ணி பேசுவார். நிமிர்ந்து நில் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது கூட நிறைய பேசுவோம். நான் பேசுவது அவருக்கு புரியாது, அவர் பேசுவது எனக்கு புரியாது. விடுதலை பார்த்துவிட்டு அரை மணிநேரம் பேசினார். டைரக்டர் எல்லாம் நடிகராக மாறிவரும் காலத்தில் ஒரு காமெடி ஆக்டர் டைரக்டராகி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.  

காமெடி நடிகரா ஒரு கூடுதல் நன்மை என்னவென்றால், ஹீரோவை விட அதிக படங்களில் நடித்திருப்போம். அதனால் நிறைய டைரக்டர்களுடன் வேலை பார்த்திருப்போம். அவர்களிடமிருந்து எதாவது ஒன்று தனராஜ் கத்துக்கிட்டு இருப்பார். அதை எல்லாமே இந்த படத்தில் பதிவு செய்திருப்பார் என நம்புறேன். பொதுவாக அப்பா மகன் கதையென்றால், மேக்கிங் பெரிதாக தேவையில்லை. இருவருக்கும் இடையிலான எமோஷன்களை சரியாக பதிவு செய்தால் போதும். அப்படி பதிவு செய்த படங்கள் தோற்றதில்லை. உதாரணத்திற்கு அப்பா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாரடி நீ மோகினி, முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு என சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் இந்த படத்திலும் அப்பா மகன் எமோஷனை நன்றாக காட்டியிருப்பது போல் தெரிகிறது. அதனால் இந்த படமும் தோற்காது. சமுத்திரக்கனியை உண்மையான ஹீரோ என அவரிடம் பழகும் நிறைய பேர் சொல்வார்கள். அந்த வகையில் எனக்கும் அவர் ஹீரோ மாதிரி தான். எப்போதுமே பாசிட்டிவாக இருப்பார்” என்றார்.