samuthirakani in five time Yellandu MLA Gummadi Narsaiah bio pic

நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, கடைசியாக தெலுங்கில் பவன் கல்யானை வைத்து 'ப்ரோ' படத்தை இயக்கியிருந்தார்.'வினோதய சித்தம்' படத்தின் ரீமேக்கான இப்படம் கடந்த ஜூலை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தமிழில் 'திரு.மாணிக்கம்' என்ற தலைப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஹரியின் ரத்னம், ஷங்கரின் இந்தியன் 2, கேம் சேஞ்சர் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் அரசியல் பயோ-பிக் கதையில் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் எல்லண்டு (Yellandu) தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நின்று 5 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பதிவு செய்யப்படாத சிபிஐ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) புதிய ஜனநாயகம் கட்சியைச் சேர்ந்தவர். அப்பகுதி மக்கள் இவரை, ‘மக்கள் மனிதன்’ எனஅழைத்து வருகின்றனர். 25 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், சைக்கிளிலேயேபயணிக்கிறார். மேலும் சொந்த வீடு இல்லாமல் வாழ்ந்து வருவதாகப் பேசப்படுகிறது.

கும்மாடி நர்சய்யா என்ற அவரது பெயரின் தலைப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பரமேஷ்வர் ஹிவ்ராலே இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில்தான் கும்மாடி நர்சய்யா கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.