Advertisment

பிரபல தெலுங்கு நடிகரை இயக்கும் சமுத்திரக்கனி

Samuthirakani is directing famous Telugu actor

Advertisment

தமிழில், தம்பி ராமையா மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த ஆண்டு 'ஜீ 5' ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான படம் 'வினோதய சித்தம்'. 'அபிராமி மீடியா ஒர்க்ஸ்' தயாரித்திருந்த இப்படத்திற்கு சத்யா இசையமைத்திருந்தார். சமுத்திரக்கனி இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது.

இந்நிலையில் 'வினோதய சித்தம்' தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும் தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தரம் தேஜ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழில் இயக்கிய சமுத்திரக்கனியே தெலுங்கிலும் இயக்குவார் என சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ACTOR PAWAN KALYAN samuthirakani Vinodhaya Sitham
இதையும் படியுங்கள்
Subscribe