ADVERTISEMENT

ஷூட்டிங் ஸ்பாட்டில் சமுத்திரக்கனிக்கு கேக் ஊட்டிவிட்ட பிரஷாந்த்!

06:07 PM Apr 26, 2021 | santhosh

ADVERTISEMENT

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியான ஹிந்தி படம் 'அந்தாதுன்'. அந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்தினர். ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் இதை ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக சித்தார்த், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக் உரிமத்தைப் பெற முயற்சித்தார்கள் என அப்போது தகவல் வெளியானது.

ADVERTISEMENT

'தி பியானோ டியூனர்' என்ற பிரஞ்சு ஷார்ட் ஃப்லிமை தழுவி எடுக்கப்பட்ட 'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சமீபத்தில் நடிகர் பிரஷாந்த் கைப்பற்றினார். 'அந்தகன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆயுஷ்மான் குரானாவாக பிரஷாந்த் நடிக்கிறார். இப்படத்தை நடிகர் பிரஷாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லியாக தபு நடித்த வேடத்தில் சிம்ரன் நடித்து வந்த நிலையில், நாயகியாக, ராதிகா ஆப்தே வேடத்தில், பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். கரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கேக் வெட்டி கொண்டாடினர். அதில் பிரஷாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT