Advertisment

“எளியவன் வலியவனால் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான்” - சமுத்திரக்கனி

samuthirakani about politics in small movie release problems

Advertisment

நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, அனன்யா நடித்துள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு போன்ற நடிகர் பட்டாளம் நடித்துள்ள நிலையில் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினி முதல் பல்வேறு பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டினர். மேலும் கடந்த 24ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசினர். மேலும் பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதில் அளித்தனர்.

அப்போது சிறிய படங்கள் சந்திக்கும் பிரச்சனை கடந்த ஆட்சியில் இல்லை என்று ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி, “எல்லா ஆட்சியிலும் அந்த பிரச்சனை இருக்கிறது. எளியவன் வலியவனால் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். வலியவனுக்கு தான் இங்கு பலம். இங்கு அரசியல் பேச்சு வேண்டாம்” என்றார்.

samuthirakani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe