Skip to main content

"கடைசி நொடி வரை உழைத்த மனிதர்" - மனோபாலா குறித்து சமுத்திரக்கனி

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

samuthirakani about manobala

 

பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா நேற்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விஜயகாந்த், சீமான் என பல்வேறு அரசியல் தலைவர்களும் ரஜினி, கமல் தொடங்கி கார்த்தி, ஜெயம் ரவி என பல்வேறு திரை பிரபலங்களும் சமூக வலைதளதம் வாயிலாக தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். 

 

மேலும், சென்னை சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் வீட்டில் விஜய், விஜய் சேதுபதி, ஆர்யா, சூரி, ஷங்கர் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தனர். அப்போது விஜய் சேதுபதி பேசுகையில், "ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. என்ன சொல்றதுனே தெரியல. ஒரு 15 நாள் முன்னாடி தான் பேசிக்கிட்டு இருந்தேன். ரொம்ப வருத்தமா இருக்கு" என்றார். 

 

சமுத்திரக்கனி பேசுகையில், "அந்தகண் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது மருத்துவமனையில் இருந்து மனோபாலா சார் நடிக்க வந்திருந்தார். அவரிடம் ஏன் மருத்துவமனையில் இருந்து வந்தீங்க என்று கேட்டேன். அதற்கு, ‘இல்லடா... நான் இறந்துட்டேன்னு செய்தி போட்டாங்க. நான் இருக்கேன்னு ஒரு ஃபோட்டோ எடுத்து உடனடியா போடு’ என்று சொன்னார். வாரத்துக்கு ஒரு முறை போன் செய்துவிடுவார். கூடப் பொறந்தவங்க கூட அப்படி விசாரிக்க மாட்டாங்க. அப்படி ஒரு அண்ணன். கடைசி நொடி வரையும் உழைச்ச ஒரு மனிதர்" என்றார். 

 

நாசர் பேசுகையில், "எல்லாரும் ஒரே உணர்வோடு தான் இருக்கோம். மனோபாலாவோடு பழகியவர்கள் யாரும் மேலோட்டமாக பழகியவர்கள் இல்லை. ரொம்ப நெருக்கமான நண்பனாகத் தான் பழகியிருக்கிறார்கள். எவ்ளோ பெரிய சீரிஸானா விஷயம் நடந்தாலும் அதையே காமெடியாக்கி சொல்லி எங்களுடைய மன அழுத்தத்தை போக்குவார். அவர் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டிருக்கிறேன். அவர் எவ்வளவு அழகா கதை எழுதுவாரோ அவ்வளவு அழகாக சமைப்பார் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும் என தெரியவில்லை" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பவன் கல்யாணுக்கு சமுத்திரக்கனி வாழ்த்து 

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
samuthirakani wishes pawan kalyan

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண், 2014-ஆம் ஆண்டு ஜனசேனா என்னும் கட்சியைத் தொடங்கினார். அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்துப் போட்டியிடாமல் பிரச்சாரம் மட்டும் செய்தார். பின்பு அக்கூட்டணியிலிருந்து 2018ஆம் ஆண்டு விலகி 2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 

இந்த நிலையில் நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளடக்கிய கூட்டணியில் இடம்பெற்றிருந்தார். சட்டமன்றத் தொகுதிகளில் 21 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பவன் கல்யாண்  70279 வாக்கு வித்தியாசத்தில் முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும் அவரது கட்சி போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது. 

இதையடுத்து பவன் கல்யாணுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி, “வாழ்த்துக்கள் அண்ணா, வென்றோம். ஆந்திரா மக்களின் கனவு மெய்ப்பட்டது. பிரபஞ்சத்துக்கு நன்றி” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பவன் கல்யாணை வைத்து ‘ப்ரோ’ என்ற தலைப்பில் சமுத்திரக்கனி  ஒரு படம் எடுத்திருந்தார். இது தமிழில் அவர் இயக்கி நடித்த வினோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சமுத்திரக்கனி பிறந்தநாளை முன்னிட்டு, சாதியற்ற சமுதாயத்தை விரும்புபவர் எனக் குறிப்பிட்டு பவன் கல்யாண் தனது ஜன சேனா கட்சி தொடர்பாக வாழ்த்தியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.  

Next Story

“தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் மன நோயாளிகள்” - சமுத்திரக்கனி 

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
samuthirakani about criticism

சமுத்திரக்கனி கடைசியாக விஷாலின் ரத்னம் படத்தில் நடித்திருந்தார். இப்போது ஷங்கர் - கமலின் இந்தியன் 2, ஷங்கர் - ராம் சரணின் கேம் சேஞ்சர் ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் தென்காசியில் உணவக திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.   

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு மலையாளப் பட ஷூட்டிங்கிற்காக வந்திருக்கேன். உண்மை சம்பவத்தைத் தழுவிய படம். என்னுடைய படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றார். சூரியின் வளர்ச்சி குறித்த கேள்விக்கு, “என்னுடைய தம்பி சூரி. எதுவுமே இல்லாத கஷ்டப்பட்ட காலத்திலிருந்து அவனை எனக்கு தெரியும். அவனுடைய சொந்த உழைப்பால் இந்த இடத்திற்கு வந்திருக்கான். இன்னும் நிறைய வெற்றிகளை  பார்ப்பான்.  ஏனென்றால் அவன் கடினமான உழைப்பாளி” என்றார். 

படங்களுக்கு தரம் தாழ்ந்த விமர்சனம் வருவது தொடர்பான கேள்விகளுக்கு, “தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மன நோயாளிகள். அவங்களை நாம் எதுவும் செய்ய முடியாது. அவங்களும் இருந்துட்டுத்தான் இருப்பாங்க. நம்ம நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்க வேண்டியது தான். அப்படித் தான் போய்கிட்டு இருக்கோம். ஒரு சில நேரத்தில் கஷ்டமா இருக்கும். அதைக் கடந்து போய்விட வேண்டும்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் சினிமா வளர்ந்துக் கொண்டேதான் இருக்கும். நான் வருஷத்துக்கு ஒரு படம் இயக்கி கொண்டுதான் இருக்கேன். வினோதய சித்தம் முடித்துவிட்டு அதைத் தெலுங்கில் இயக்கினேன். போன வருஷம் படம் ரிலீஸானது. இந்த வருஷம் ஜூலையில் ஒரு படம் ஆரம்பிக்கப் போறேன். தியேட்டருக்கு மக்கள் வருவது ரொம்ப குறைந்து விட்டது. கிராமபுரத்தில் யாரும் தியேட்டருக்கு வருவதில்லை. முதல் நாள் முதல் காட்சிக்கு வருபவர்களை பார்த்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனால் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்ஸ் நல்லா ஓடிக்கொண்டு தான் இருக்கு. சினிமா என்பது வேற வேற ரூபத்தில் வந்து கொண்டு இருக்குமே தவிர, அழிந்துவிடாது. சினிமாவை ஒன்னும் பண்ண முடியாது. ரசிகர்கள் இருக்கும் வரை சினிமா இயங்கிக் கொண்டுதான் இருக்கும். வடசென்னை 2 நிச்சயமா வரும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு வருகிறது” என்றார்.