untitled 1

Advertisment

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. இதனை தொடர்ந்து வாட்ச்மேன் மற்றும் பப்பி படங்களில் நடித்தார்.

டான்சராக இருக்கும் இவர், அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் டான்ஸ் வீடியோக்களையும், உடற்பயிற்சி வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்.

பெங்களூரில் ஒரு பார்க்கில் நடிகை சம்யுக்தா ஹெக்டே நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது அவரது உடை குறித்து அங்கிருப்பவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர் அணிந்திருந்த உடை உடற்பயிற்சிக்கு அணியும் வகையிலான உடை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. சம்யுக்தாவின் நண்பரை அவர்கள் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக பகிர்ந்து இந்த சம்பவம் குறித்து நியாயம் கேட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ட்விட்டரிலும் பெண் ஒருவரை குறிப்பிட்டு, நண்பரை தாக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.தாக்கிய நபர் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகிப்பவர் என்று சொல்லப்படுகிறது.