
நடிகை சமீரா ரெட்டிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேட்டை, வெடி உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சினிமாவில் இருந்து முழுமையாக விலகி இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்திவருகிறார். தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை சமீரா ரெட்டி தன்னுடைய சமூக வலைதளப்பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம். சாஸி மற்றும் சாசு கடவுளின் ஆசீர்வாதத்தால் தனியாக பாதுகாப்பாக இருக்கிறார்கள். நாங்கள் வீட்டுத் தனிமையில் இருக்கவுள்ளோம். என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருப்பதை நான் அறிவேன். இது, நேர்மறையான உறுதிமொழிகளுடன் திடமாக இருக்க வேண்டிய நேரம். நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம். பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.