சமந்தா படத்திற்கு எதிரான வழக்கு - நீதிமன்றம் அதிரடி

Samantha's Yashoda movie case OTT release delayed

சமந்தா நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் படம் 'யசோதா'. இப்படத்தை 'ஸ்ரீ தேவி மூவிஸ்' நிறுவனம் தயாரிக்க ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இருவரும் இணைந்து இயக்கியிருந்தார்கள். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மணி சர்மா இசையமைத்திருந்தார். வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளதால் மருத்துவமனை சம்மந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் ஹைதராபாத் சிவில் நீதிமன்றத்தில் ஒரு தனியார் மருத்துவமனை நிர்வாகம்'யசோதா' படத்தில் தங்களுடைய மருத்துவமனையின் பெயரைத்தவறாகப் பயன்படுத்தி எங்களுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதுவரை 'யசோதா' படத்தை ஓடிடியில் வெளியிடத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே யசோதா படத்தை டிசம்பர் மாதம்ஓடிடியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டதாகவும்அது தற்போது தாமதமாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

samantha Ruth Prabhu yashoda
இதையும் படியுங்கள்
Subscribe