"புது கதை... புது அத்தியாயம்" - சமந்தா தந்தை உருக்கம்

Samantha's father's emotional post

சமந்தா - நாக சைதன்யா இருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் விவகாரத்தை அறிவித்து பிரிந்தனர். பின்பு இருவரும் அவர்களது திரைத்துறையில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். அந்த வகையில் சமந்தா தற்போது 'குஷி' விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதே போல் நாகசைதன்யா, வெங்கட் பிரபு இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே சமந்தாவின் தந்தை தனது சமூக வலைதளபக்கத்தில் சமந்தா - நாக சைதன்யா ஆகியோரது திருமண புகைப்படங்கள் உள்ளிட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு கதை இருந்தது. மேலும் அது இனி இருக்காது. எனவே, ஒரு புதிய கதை மற்றும் புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்" என குறிப்பிட்டிருந்தார். அவர் பதிவின் கமன்ட்டில் பலரும் ஆறுதல் கூறும் வகையில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தனது பதிவின் கமன்ட் செக்ஷனில் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "உங்கள் எல்லா உணர்வுகளுக்கும் நன்றி. ஆம், உணர்ச்சிகளைக் கடக்க நான் நீண்ட நேரம் முயற்சிக்கிறேன். உணர்வுகளுடன் உட்காந்து, சிக்கித் தவிப்பதை பார்க்கும் போது வாழ்க்கை மிக குறுகியதாக தெரிகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Subscribe