Advertisment

கர்ப்பிணி பெண்ணாக ஆக்ஷனில் கலக்கும் சமந்தா

samantha Yashoda teaser released

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தற்போது 'சாகுந்தலம்' மற்றும் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே 'ஸ்ரீ தேவி மூவிஸ்' நிறுவனம் தயாரிக்கும் 'யசோதா' படத்தில் நடித்துள்ளார். ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இருவரும் இணைந்து இயக்கும் இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் கிளிம்ஸ் காட்சி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

Advertisment

இந்நிலையில் 'யசோதா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை பார்க்கையில், சமந்தா கர்ப்பிணி பெண்ணாக வருகிறார். பின்பு தனது வயிற்றில் வளரும் குழந்தையை காப்பாற்ற பல ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்துள்ளது போல் தெரிகிறது. தெலுங்கில் உருவாக்கப்பட்ட இப்படம், தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது.

Advertisment

yashodha movie samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe