
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா தற்போது 'யசோதா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரி நாராயணன் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகை வரலட்சுமி சரத்குமார் மதுபாலாவாக இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'யசோதா' திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் சமந்தாவின் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.