samantha mahanati

Advertisment

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் 'மகாநதி' என்றும், தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் வரும் மே 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜெமினி கணேசனாக துல்கர்சல்மான் நடிக்கிறார். பத்திரிக்கை நிருபராக சமந்தா நடிக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நிருபராக நடிக்கும் சமந்தா தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து 3 படங்களை நடித்து முடித்ததில் மகிழ்ச்சி என்றும், சாவித்ரி வாழ்க்கை சம்பந்தப்பட்ட படத்தில் தானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை என்றும் சமந்தா அதில் குறிப்பிட்டுள்ளார்.