Skip to main content

சர்ச்சைக்குரிய வெப்சீரிஸில் சிறந்த நடிப்பு; சமந்தாவுக்கு விருது

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

Samantha won the Best Actress filmfare award

 

நடிகை சமந்தா நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் கடந்த ஜூன் மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், இந்தப் படத்துக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

ad

 

இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு ‘தி ஃபேமிலி மேன் 2’  வெப் தொடரில் நடித்ததற்காக  சிறந்த நடிகைக்கான ஓடிடி பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார். பிலிம்பேர் பத்திரிகையின் மூலம் இந்தியாவில் ஆண்டுதோறும் சினிமா துறையில் சிறந்த படைப்புகள் மற்றும் படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான ஓடிடி பிலிம்பேர் விருது வழக்கும் விழா மும்பையில் நேற்று (9.11.2021) நடைபெற்றது. இவ்விழாவில் ‘தி ஃபேமிலி மேன் 2’  வெப் தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது சமந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இத்தொடரை இயக்கியதற்காக இயக்குநர்கள் ராஜ் மற்றும் கிருஷ்ணா டிகே இருவருக்கும் சிறந்த இயக்குநர்களுக்கான ஓடிடி பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. மேலும் இந்த தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது மனோஜ் பாஜ்பாயிக்கும், துணைநடிகருக்கான விருது ஷரீப் ஹாஸ்மிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அட்லீ படத்திற்கு இரண்டு ஃபிலிம் ஃபேர் விருது!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
atlee jawan grab 2 award in 2024 filmfare

திரைத்துறையில் பிரபல விருதாகப் பார்க்கப்படும் ஃபிலிம் ஃபேர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டிற்கான 69வது ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் விழா, குஜராத் காந்தி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர். விருது வென்றவர்களின் பட்டியல் பின்வருமாறு.

சிறந்த படம் - 12த் ஃபெயில்
சிறந்த படம் (விமர்சகர்கள் தேர்வு) - ஜோரம்
சிறந்த நடிகர் - ரன்பீர் கபூர் (அனிமல்)
சிறந்த நடிகை - ஆலியா பட் (ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி)
சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) - விக்ராந்த் மாஸ்ஸே (12த் ஃபெயில்)
சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) - ராணி முகர்ஜி (மிஸ்ஸஸ் சாட்டர்ஜி விஸ் நார்வே), ஷெஃபாலி ஷா (த்ரீ ஆஃப் அஸ்)
சிறந்த இயக்குநர் - விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்)
சிறந்த துணை நடிகர் - விக்கி கவுஷல் (டங்கி)
சிறந்த துணை நடிகை - ஷபானா ஆஸ்மி (ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி)
சிறந்த இசை ஆல்பம் - அனிமல் 
சிறந்த பாடல் வரிகள் - அமிதாப் பட்டாச்சார்யா (ஸாரா ஹட்கே ஸாரா பச்கே)
சிறந்த பின்னணி பாடகர் - பூபிந்தர் பாபல் (அர்ஜன் வைல்லி - அனிமல்)
சிறந்த பின்னணி பாடகி - ஷில்பா ராவ் (பேஷாராம் ரங் - பதான்)
சிறந்த கதை - அமித் ராவ் (ஒஎம்ஜி 2)
சிறந்த திரைக்கதை - விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்)
சிறந்த வசனம் - இஷிதா மொய்த்ரா (ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி)
சிறந்த பிண்ணனி இசை - ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் (அனிமல்)
சிறந்த ஒளிப்பதிவு - அவினாஷ் அருண் தாவேரே (த்ரீ ஆஃப் அஸ்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - சுப்ரதா சக்ரபோர்த்தி மற்றும் அமித் ரே (சாம் பகதூர்)
சிறந்த படத்தொகுப்பு - ஜஸ்குன்வர் சிங் கோஹ்லி - விது வினோத் சோப்ரா (12த் ஃபெயில்)
சிறந்த ஆடை வடிவமைப்பு - சச்சின் லவ்லேகர், திவ்யா கம்பீர் மற்றும் நிதி கம்பீர் (சாம் பகதூர்)
சிறந்த சண்டை இயக்குநர் - ஸ்பிரோ ரசாடோஸ், அனல் அரசு, கிரேக் மேக்ரே, யானிக் பென், கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் (ஜவான்)
சிறந்த விஎஃப்எக்ஸ் - ரெட் சில்லிஸ் விஎஃப்எக்ஸ் (ஜவான்)
சிறந்த அறிமுக இயக்குநர் - தருண் துடேஜா (தக் தக்)
சிறந்த அறிமுக நடிகர் - ஆதித்யா ராவல் (பராஸ்)
சிறந்த அறிமுக நடிகை - அலிசே அக்னிஹோத்ரி (ஃபாரே)
வாழ்நாள் சாதனையாளர் விருது - டேவிட் தவான்

Next Story

தங்கக் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

Actress Samantha Swamy Darshanam at Golden Temple


வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்  நடிகர் நடிகைகள் வந்து சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.

 

Actress Samantha Swamy Darshanam at Golden Temple

 

இந்நிலையில் நேற்று பொற்கோவிலுக்கு வந்த பிரபல நடிகை சமந்தா ஸ்ரீ நாராயணி அம்மனை தரிசனம் செய்துள்ளார். பின்பு தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கையால் அபிஷேகம் செய்தும், தீபாராதனையும் செய்த பிறகு கோயிலை சுற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொற்கோயில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவருக்கு சக்தி அம்மா பிரசாதத்தை வழங்கியுள்ளார். வேலூர் பொற்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சமந்தாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.