samantha visited palani murugan temple

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சமந்தா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் போக, அவர் ஒப்பந்தமாகியுள்ள படங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisment

இதனிடையே நோயின் காரணமாக பூரண குணமடையும் வரை சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சற்று உடல்நலம் தேறிய சமந்தா, அவர் நடித்த 'சாகுந்தலம்' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது படக்குழுவினர் படத்துக்காக சமந்தா பட்ட கஷ்டத்தை விவரிக்க, மேடையிலேயே கண் கலங்கினார். இப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இப்போது மீண்டும் பழையபடி படங்களில் நடிக்கத் தொடங்கி விட்ட சமந்தா தற்போது வருண் தவான் நடிப்பில் உருவாகும் 'சிட்டடேல்' வெப் சீரிஸில் நடித்து வருகிறார். மேலும் உடற்பயிற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். தன்னுடைய உடல்நலம் முன்னேறுவதற்காக 600 படிகள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தார்.

அவருடன் 96 பட இயக்குநர் பிரேம் குமார் மற்றும் அவரது குழுவினரும் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் 96 பட தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.